மரண அறிவித்தல்
திரு.தர்மலிங்கம் சண்முகதாஸ் (சின்ராசு)
முன்னாள் பனை அபிவிருத்திச்சபை ஊழியர்
வயது 64
மண்டைதீவு 1ஆம் வட்டாம் (பிறந்த இடம்)
திரு.தர்மலிங்கம் சண்முகதாஸ் (சின்ராசு) 22 Dec 1955 - 12 Jan 2019 மண்டைதீவு 1ஆம் வட்டாம்

மண்டைதீவு 1ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் அரியாலை A.V. றோட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங் கம் சண்முகதாஸ் (சின்ராசு-முன்னாள் பனை அபிவிருத்தி சபை ஊழியர்) அவர்கள் 12.01.2019 சனிக்கிழமை அன்று காலமாகி விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற தர்மலிங்கம் (ஆசிரியர்) மற்றும் புவனேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற வர்களான நடராசா- பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும் அம்பிகாரெத்தினத்தின் பாசமிகு கணவரும், நிவேதிக்கா, கஜானன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், தர்மகுலேந்திரன், மல்லிகாதேவி, ஜானகி (கனடா), கருணாகரன் (ரவி,கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்றவர்களான தர்மராசா, சண்முகநாதன், தனபாலசூரியர்,இராஜசூரியர், கனகசூரியர்,புவனேஸ்வரி,சகுந்தலாதேவி, மதுரரெத்தினம், சிவகுமார் (கனடா) மற்றும் மகேஸ்வரி (லண்டன்), இராஜேஸ்வரி, மதிகலா ஆகியோரின் மைத்துனரும் கமலரூபன் (பிரான்ஸ்), சர்மிலா, சஜிதா, சசிறேகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் தசாயினி, யதுர்சிகா, தனுசியா, ரஜிதா (கனடா), அனோஜன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் அரங்கன், அட்சரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் இரத்தினசபாபதி, சந்திரமதி தம்பதியின் அன்பு சம்பந்தியும் பிரதீப்பின் பாசமிகு மாமனாரும் பிரியந்தி, வருண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14.01.2019 இன்று திங்கட்கிழமை 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

தொலைபேசி : 077 408 0578

மகன்

தொலைபேசி : 077 041 7254