மரண அறிவித்தல்
பாலசிங்கம் ஸ்ரீபாதன்
ஹரினி ஹாட்வெயார் உரிமையாளர், பிரபல புகையிலை வியாபாரி
வயது 55
மண்டைதீவு (பிறந்த இடம்)
பாலசிங்கம் ஸ்ரீபாதன் 07 Oct 1964 - 23 Feb 2019 மண்டைதீவு

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ஸ்ரீபாதன்  அவர்கள்  23.02.2019 சனிக்கிழமை அன்று இறையடி இணைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் சிவபாக்கிய லக்ஷ்மி தம்பதியரின் அருமை மூத்த புத்திரனும், காலஞ்சென்ற கனகசபாபதி-ராஜேஸ்வரி அம்மா அவர்களின் மருமகனும், கலையரசி அவர்களின் அன்புக் கணவரும், ஹரினி (2019 பு/ஸி யாழ். இந்து மகளிர் கல்லூரி), ஹரிஹரன் (தரம் 10 யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

வசந்தி (மல்லாவி), ஜெயந்தி(கனடா) ஸ்ரீரங்கன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காந்தரூபன் (மல்லாவி), கதிர்செல்வன் (கனடா), தனுஷா (கனடா), மங்கையகரசி (கனடா), கெளரீசன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உலகராஜா (கனடா), சோதிமாலா (யாழ்ப்பாணம்) அவர்களின் சகலனும்,

அஸ்வின், அஜெய், அகில் அவர்களின் பெரியப்பாவும், ஆரணி, பவதாரணி அவர்களின் சித்தப்பாவும், கஜந்தன், சர்மினி, தர்´கா, து´க்கா, தயான், மாதே­ன், ஜெகதே­ன், கஜதே­ன் அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகள் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர் - 021 221 2279

தொடர்புகளுக்கு

ஸ்ரீரங்கன்(சிறி)

தொலைபேசி : +16474493311

கலையரசி

தொலைபேசி : +94212212279